உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 30 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு
உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 30 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு;
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ராஜேந்திரன் என்ற தர்மா பணியின் போது திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் சார்பில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன், குருவிகுளம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் மாலை அணிவித்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.. மேலும் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் கண்களை சோகமடையச் செய்தது...