ஆரணி நகராட்சியில் ரூ.30லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுதாராதர நிலைய கட்டும் பணி. நகரமன்ற தலைவர் ஆய்வு.
ஆரணி நகராட்சியில் ரூ.30லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுகாதார நிலையம் கட்டும் பணியினை புதன்கிழமை நகமன்ற தலைவர் ஏ.சி.மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
ஆரணி நகராட்சியில் ரூ.30லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுகாதார நிலையம் கட்டும் பணியினை புதன்கிழமை நகமன்ற தலைவர் ஏ.சி.மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆரணி நகராட்சியில் 15வது நிதிக்குழுவில் இருந்து ரூ.30லட்சம் மதிப்பில் நகர்ப்புர சுகாதார நிலையம் கட்டும் பணியினை நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி ஆய்வு செய்தார். மேலும் 17வது வார்டில் பூங்கா அமைக்க இடத்தினை தேர்வு செய்யவும், ஆரணி கொசப்பாளையம், என்,எஸ்.கே.நகர் பகுதியில் சாலை அமைக்கவும், கால்வாய் அமைக்கவும் பார்வையிட்டார். பின்னர் ஆரணி அண்ணாசிலை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கவும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஆணையாளர் என்.டி.வேலவன், நகரமன்ற உறுப்பினர்கள் பழனி, அரவிந்த், ஐ.எஸ்.என்.மாலிக்பாஷா, ஜெயவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.