தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள விவேகானந்தர் காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள், லோடு வேன் பறிமுதல் ஒருவர் கைது க்யூ பிரிவு போலீசார் நடவடிக்கை.;
தூத்துக்குடி கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு தொடர்ந்து பீடி இலைகள், மஞ்சள், மாத்திரைகள், மற்றும் அழகு சாதன பொருள் பல்வேறு விதமான பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது இதை தடுக்கும் பணியில் க்யூ பிரிவு காவல் துறையினர் மற்றும் கடலோர காவல் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தூத்துக்குடி தாளமுத்து நகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் இருந்து படகுமூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான க்யூ பிரிவு காவல் துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர் அப்போது இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 900 கிலோ பீடி இலைகள் இருப்பதைக் கண்ட க்யூ பிரிவு போலீசார் அவற்றை பறிமுதல் செய்து லோடு வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி தாளமுத்து நகர் டேவிஸ் புரம் கருப்பசாமி நகரைச் சார்ந்த உமா விஜயகுமாரை (23) கைது செய்து அவர் ஓட்டி வந்த லோடு வேளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடியலைகளின் மதிப்பு ரூபாய் 30 லட்சம் ஆகும். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.