தேசிய ரத்தநாள தினத்தை முன்னிட்டு சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு

Update: 2024-08-04 04:00 GMT
தேனியில் தேசிய ரத்த நாளம் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ரத்த நாளம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக ஆண்டு தோறும் பல்வேறு அமைப்பினர் சார்பில் வாக்கத்தான் (நடைப்பயிற்சி ) மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தேனியில் ரத்த நாளம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது தேனி பங்களாமேடு பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தொடங்கி வைத்து அவர்களுடன் நடைபயணமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார் தேனி பங்களாமேட்டில் தொடங்கிய இந்த பேரணி தேனி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தேனி பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர் இதில் ரத்த நாள மருத்துவர்கள் மாணவர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்று ரத்த நாளங்கள் பாதிப்புகளால் ஏற்படும் குறைபாடுகள் குறித்தும் அதனை போக்க மக்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உணவியல் முறை ஆகியவற்றை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Similar News