அரவக்குறிச்சி -300 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு நடைபெறும் கோவில் திருவிழா.
அரவக்குறிச்சி -300 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு நடைபெறும் கோவில் திருவிழா.;
அரவக்குறிச்சி -300 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு நடைபெறும் கோவில் திருவிழா. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சௌந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் மாசி பெரியசாமி கோவில் திருவிழாவை நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளப்பட்டி சொட்டல் தெருவை சார்ந்த மணியார் வம்சாவளியை சார்ந்தவர்கள் இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு கடந்த 300 ஆண்டுகளாக வாரிசுகளாக இத்திருவிழாவிற்கு அழைப்பு விடுப்பது வழக்கம்.இந்த நிலையில் நாதஸ்வரத்துடன் இஸ்லாமியர்கள் வீட்டிற்கு சென்று அழைப்பு விடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடம் ஷேக் அப்துல் காதர் தர்கா சந்தனக்கூடு இரண்டாம் நாள் இவர்கள் அவர்களுக்கு அழைப்பு விடுப்பர். இந்தப் பாரம்பரிய அழைப்பு மத நல்லிணக்கம் இஸ்லாமியர், இந்துக்கள் ஒற்றுமை கடந்த 300 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரிசாக இதனை கடைப்பிடித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து இன்று பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சொட்டல் தெரு வழியாக சவுந்தாராபுரம் பொதுமக்கள் அக்னி சட்டி எடுத்தல்,அழகு குத்தி கோவில் பூசாரி அரிவாள் மேல் நின்றபடி ஊர்வலமாக வந்தனர். அப்பொழுது இஸ்லாமிய பெருமக்கள் அவர்களை பூ பழம் பொன்னாடை கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். இந்து-முஸ்லீம் பெருமக்கள் ஒருவருக்கு ஒருவர் இணைந்து ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அதனைத் தொடர்ந்து அனைவரும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.