கரூர் அடுத்த நெரூர் ஸ்ரீ அக்னிஸ்வரர் கோவிலில் 300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கரூர் அடுத்த நெரூர் ஸ்ரீ அக்னிஸ்வரர் கோவிலில் 300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.;
கரூர் அடுத்த நெரூர் ஸ்ரீ அக்னிஸ்வரர் கோவிலில் 300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் கரூரை அடுத்த நெரூர் ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அக்னீஸ்வரர் திருக்கோவிலில் நாத உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். 16-ம் ஆண்டாக இன்று கோவில் வளாகத்தில ஸ்ரீ அக்னீஸ்வரர் வழிபாட்டு மன்றம் சார்பாக நாத உற்சவ விழா இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாதஸ்வர வித்துவான்கள் , தவில் கலைஞர்கள்,தம்புரா கலைஞர்கள் ஒரு சேர இறைவனை வாழ்த்தி இசைத்த பக்தி பரவசம் மிகுந்த இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ராகங்களை முன்னிறுத்தி இசை கலைஞர்கள் இசைத்த இசை நிகழ்ச்சி பார்வையாளர்களையும் பக்தர்களையும் பரவசப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான இசைக் கலைஞர்கள் இசை பிரியர்கள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து நாத உற்சவ விழாவை சிறப்பித்தனர்.