சிவகங்கையில் 3000 லிட்டர் எரி சாராயம் அழிப்பு
சிவகங்கையில் 3000 லிட்டர் எரி சாராயத்தை போலீசார் அழித்தனர்;
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லிட்டருக்கும் மேற்பட்ட எரி சாராயம் குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் காவல் கண்காணிப்பில் இருந்தது. இதனைச் சட்டப்படி அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று கூடுதல் எஸ்.பி. சுகுமாரன் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் செயல்பட்டு, சிவகங்கை மருத்துவக் கல்லூரி அருகே பள்ளம் தோண்டி, பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயத்தை ஊற்றி தீ வைத்தனர். இச்சம்பவம் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான எரிபொருள் இவ்வாறு மருத்துவமனைக்கு அருகே எரிக்கப்பட்டது, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட அவசர நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.