ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 31-ஆம் தேதி மூடப்படுகிறது
ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 31.05.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 06.00 வரை வழிதடம் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.;
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 441 Rly KM:579/900-580/000 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. எனவே 31.05.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.