தேர்வில் தேர்ச்சி பெற்ற 31 92 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான தேர்வில் தேர்ச்சியடைந்த 3192 நபர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணிநியமன ஆனை வழங்ககாததால் நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

Update: 2024-12-23 16:01 GMT
:- 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை (BT / BRTE) - நிரப்புவதற்கான அறிவிப்பாணையினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 4- ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்ச்சி பெற்றவர்கள் ஜீன் மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று ஆகஸ்ட் மாதம் உத்தேச தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது உத்தேச தேர்வுப்பட்டியல் இடம்பெற்றுள்ள 3192 நபர்களுக்கு நான்கு மாதங்கள் கடந்தும் கலந்தாய்வு நடைபெறவில்லை. ஆனால் தேர்ச்சி பெற்று ஆதிதிராவிடப் பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் பலநாட்களுக்கு முன்பே பணியில் சேர்ந்துவிட்டனர். பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான இத்தேர்வு 10 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றதால் பலர் தனியார் வேலையை துறந்து விட்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் அதிகமானோர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கருதி எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான (BT / BRTE) -க்கான கலந்தாய்வினை உடனே நடத்துவதற்கும், பணி நியமான ஆணையை வழங்குவதற்கும் பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் கறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Similar News