மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் 31.05.2025 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ஜ

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் 31.05.2025 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.;

Update: 2025-05-27 14:20 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்வது தொடர்பான இரண்டாம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 31.05.2025(சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்த தகவல்களை இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News