வெளி மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு ரெயிலில் கடத்தி வந்த 34 கிலோ கஞ்சா பறிமுதல்

போலீசார் 3 வாலிபர்கள் கைது செய்தனர்;

Update: 2025-03-09 03:54 GMT
சேலம் சூரமங்கலம் ஜங்ஷன் பகுதியில் நேற்று மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் 3 பேர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் வைத்திருந்த பையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் 34 கிலோ கஞ்சாவை வடமாநிலத்தில் இருந்து ரெயிலில் கடத்தி வந்ததும், அதனை சேலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கேரளா மாநிலம் கண்ணம்பரா கோட்டாக்காடு பகுதியை சேர்ந்த ஜீஜத் (வயது 31), பாலக்காடு வடக்கன்சேரியை சேர்ந்த அனுராஜ் (20), ஹமீத்காபூர் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து 34 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News