ஆந்திராவில் இருந்து காரில் 350 கிலோ குட்கா கடத்தி வந்த இருவர் கைது

ஊத்துக்கோட்டை அருகே ஆந்திராவில் இருந்து 350 கிலோ குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை;

Update: 2025-02-27 14:19 GMT
ஊத்துக்கோட்டை அருகே ஆந்திராவில் இருந்து 350 கிலோ குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக போலீசருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து பென்னாலூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 350 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டத்தில் அவர்கள் பெரியபாளையம் அடுத்த பெரியசெங்காத்தகுளம் பகுதியைச் சேர்ந்த பவன்குமார்(31) மற்றும் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன்(25) என்பதும், இவர்கள் பெங்களூரில் இருந்து மொத்தமாக குறைந்து விலைக்கு வாங்கி வந்து கடைகளுக்கு விற்பனை செய்து செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 350 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும்,போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பென்னாலூர்பேட்டை போலீசார் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து ஊத்துக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Similar News