கோவையில் 350 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் !
சிறுவாணி சாலையில் ரெய்டு – 3 பேர் கைது, வாகனங்கள் பறிமுதல்.;
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காருண்யா நகர் காவல் துறையினர் சிறுவாணி சாலையில் நேற்று நடத்திய சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 350 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் (29), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (32), தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உட்பட புகையிலை கடத்த பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.