தாராபுரம் அருகே கருப்பன்வலசு கிராமத்தில் வெறிநாய்கள் கடித்து 3.50 லட்சம் மதிப்பிலான 30 ஆடுகள் பலி.

தாராபுரம் அருகே கருப்பன்வலசு கிராமத்தில் வெறிநாய்கள் கடித்து 3.50 லட்சம் மதிப்பிலான 30 ஆடுகள் பலி.;

Update: 2024-09-01 15:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாராபுரம் அருகே கருப்பன்வலசு கிராமத்தில் வெறிநாய்கள் கடித்து 3.50 லட்சம் மதிப்பிலான 30 ஆடுகள் பலி. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பன்வலசு பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் துரைச்சாமி என்பவரது மகன் பிரகாஷ் வயது 38 வசித்து வருகிறார். இவர் பல்லாக்காட்டு தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை தனது தோட்டத்தில் முருங்கைக்காய்களை பறித்து விட்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக தனது பட்டிக்குச் சென்று ஆடுகளை பார்த்தபோது 12 ஆடுகள் மற்றும் 18 ஆட்டுக்குட்டிகள் என 30 ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக் கொதறியது. வெறிநாய்கள் கடித்துக் கொதறியதில் பரிதாபமாக 30 ஆடுகளும் உயிரிழந்தது. கருப்பன் வலசு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தினந்தோறும் விவசாய நிலங்களுக்குள் வெறிநாய்கள் அத்துமீறி ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று இதே பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் வெறிநாய்கள் கடித்த ஆடுகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு வைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளில் தினம் தோறும் வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொதறுவது வாடிக்கையாக உள்ளது.வெறி நாய்கள் மூலம் தினந்தோறும் ஆடுகள் பழியாவது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News