மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 358 கிராம் தங்கம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் முன்னிலையில் நேற்று (டிச.31) இக்கோயிலின் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 அன்னதான உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ. ஒரு கோடியே 65 லட்சத்து 50 ஆயிரத்து 107, தங்கம் 358 கிராம், வெள்ளி 839 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 508 ஆகியன கிடைத்துள்ளன.