சிவகிரி அருகே 36 மது பாட்டில்கள் பறிமுதல்
36 மது பாட்டில்கள் பறிமுதல். போலீசார் விசாரணை;
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விற்பனைக்காக பைக்கில் கொண்டு செல்லப்பட்ட 36 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா், சிவகிரி இரும்பு பாலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில் 36 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மது பாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நடுவூா் ராமசாமிபுரத்தை சோ்ந்த மைக்கேலை(30) போலீஸாா் கைது செய்து மது பாட்டில்களையும் பைக்கையும் பறிமுதல் செய்தனா்.