காமராஜபுரத்தில் கல்லூரி மாணவனிடம்ரூ. 36,000 செல்போனை களவாடிய இளைஞர் கைது.

காமராஜபுரத்தில் கல்லூரி மாணவனிடம்ரூ. 36,000 செல்போனை களவாடிய இளைஞர் கைது.;

Update: 2025-04-07 15:00 GMT
  • whatsapp icon
காமராஜபுரத்தில் கல்லூரி மாணவனிடம்ரூ. 36,000 செல்போனை களவாடிய இளைஞர் கைது. கரூர் மேற்கு காமராஜபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 23. இவர் க.பரமத்தி பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 24ஆம் தேதி காலை 7 மணி அளவில், அவரது அறையில் வைத்திருந்த ரூபாய் 36,000- மதிப்புள்ள செல்போனை களவாடி சென்று விட்டனர். இது தொடர்பாக கார்த்திகேயன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, திருச்சி மாவட்டம், உறையூர்,கீரை கொள்ளை தெருவை சேர்ந்த கூலி வேலை செய்யும் லட்சுமி நாராயணன் வயது 24 என்பவர் களவாடியது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து, களவாடிய செல்போனை மீட்டனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News