விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 364 பேர் ஆப்செண்ட்

பத்தாம் வகுப்பு தேர்வில் 364 பேர் ஆப்செண்ட்;

Update: 2025-03-29 15:32 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 364 பேர் ஆப்செண்ட்
  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 58 மையங்களும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 68 தேர்வு மையங்கள் என மொத்தம் 126 தேர்வு மையங்களில், 362 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 828 மாணவர்களும், 12 ஆயிரத்து 279 மாணவிகள் என 24 ஆயிரத்து 107 பேர் தேர்வு எழுதுகின்றனர்.நேற்று காலை 10:00 மணிக்கு தமிழ் பாட தேர்வுடன் பொதுத் தேர்வு தொடங்கியது. அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.தேர்வு பணியில் 128 முதன்மை தேர்வு கண்காணிப்பாளர்கள், 176 பறக்கும் படை குழுவினர், 1,970 அறை கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதும் ஆசிரியர்கள் 535 பேர், அலுவலக பணியாளர்கள் 250 உள்ளிட்ட 3240 பேர் ஈடுபட்டனர். 535 மாற்றுத்திறன் மாணவர்கள் தேர்வு எழுதினர்.இந்த தேர்வு மையங்களை, தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குனர் குழந்தைராஜன், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் சேகர் மற்றும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் குழுவினர், திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 176 பறக்கும் படையினரும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.முதல் நாள் தேர்வான தமிழ் பாட தேர்வில் 23 ஆயிரத்து 743 பேர் எழுதினர். 364 மாணவ, மாணவியர்கள் ஆப்சென்ட் ஆகினர்.

Similar News