தென்காசியில் பாமக 37 ஆவது ஆண்டு துவக்கம் மரக்கன்று வழங்கல்
பாமக 37 ஆவது ஆண்டு துவக்கம் மரக்கன்று வழங்கல்;
தென்காசி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சியின் 37வது ஆண்டு துவக்க விழா கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சிங்கராயன் தலைமையில் கொண்டாடபட்டது. இதில் மாநிலத் துணை தலைவர் திருமலை குமாரசாமி, ஐயம்பெருமாள் இணைந்து கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாமக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.