கரூர்-விவசாயிகளின் தேவைகளுக்காக 3752 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.

கரூர்-விவசாயிகளின் தேவைகளுக்காக 3752 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.;

Update: 2025-11-21 11:00 GMT
கரூர்-விவசாயிகளின் தேவைகளுக்காக 3752 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அமுல்ராஜ்,மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம்,மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அபிராமி,வேளாண் துறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உமா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தேவைகள் மற்றும் சந்தேகம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கூட்டத்தின் நிறைவில் பேசிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் கூட்டுறவு சங்கங்களில் தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் இதில் 1,065- மெட்ரிக் டன் யூரியா உரமும், டிஏபி 550 மெட்ரிக் டன்னும்,பொட்டாஷ் 494 மெட்ரிக் டன்னும்,என் பி கே 1643 மெட்ரிக் டன் என மொத்தம் 3752 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Similar News