இராசிபுரத்தில் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகள் திறப்பு.!
நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராடவிடர் நலத்துறை, வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலை துறைகளின் சார்பில் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகள் தொடக்கம்.
Update: 2024-08-14 10:00 GMT
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராடவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில் 2 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகள், 3 புதிய சமுதாய கூடங்களை திறந்து வைத்தார். மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 40 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 42 ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் ஆணைகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி, ஆதிதிராவிடர் நல மாணவியர் புதிய விடுதியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் ச.உமா, தலைமையில் மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். முதலமைச்சர் அவர்கள் கல்வி ஒருவரது வாழ்வில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு, மாணவ, மாணவியர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1.000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். மேலும், பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட உயர்கல்வி 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.அரசு கல்லூரி விடுதிகள் முன்பெல்லாம் அடுக்குமாடி குடியிருப்பு போல இருக்கும். ஆனால் தற்போது தனியார் கல்லூரி விடுதிகளுக்கு நிகராக சிறந்த வடிவமைப்புடன் விடுதி கட்டப்பட்டுள்ளது. கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது. கல்விக்கு ஏழை, எளிய ஏற்றத்தாழ்வு என்பது கிடையாது. கல்வி ஒன்றே ஒருவரது தலைமுறையை மாற்றும் ஆற்றல் கொண்டது. கல்வி கற்பதால் மட்டுமே ஒரு மனிதன் முழுமை அடைகிறேன். எனவே, அனைவரும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வி கற்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தூய்மை பணியாளர் ஒருவரது மகள் துர்கா அவர்கள் தேர்ச்சி பெற்று தற்போது நகராட்சி ஆணையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், கல்வி ஒன்றே யாராலும் பறிக்க முடியாத சொத்து என தெரிவித்துள்ளார்கள். எனவே, ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். நமது மிகப்பெரிய முதலீடு கல்வி மட்டுமே. எனவே, மாணவ செல்வங்கள் அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்தி கொண்டு கல்வி கற்று வாழ்வில் உயர்நிலை அடைந்து பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், நம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தார்.