மோகனூர் அருகே வடமாநில இளம் பெண் பலி

மோகனூர் அருகே வடமாநில இளம் பெண் பலியானது குறித்து போலீசார் விசாரணை;

Update: 2024-08-27 08:00 GMT
மோகனூர் அருகே வடமாநில இளம் பெண் பலி
  • whatsapp icon
மோகனூர் அருகே மட்டப்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழிப் பண்ணையில் சத்தீஸ்கர் மாநிலம் டிட்டம் பாரா பகுதியைச் சேர்ந்த பைகோ மத்காயி (18)என்ற இளம் பெண் கடந்த 18-ந் தேதி அன்று வேலைக்கு சேர்ந்து உள்ளார். இந்நிலையில் கோழி பண்ணை மேலாளர் நந்தகுமாரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அங்கு வேலை பார்த்த பல்ராம் என்பவருடன் வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் அந்தப் பெண்சை நடுவில் அமர வைத்து வந்துள்ளனர். அதைப் பார்த்த கோழிப்பண்ணை மேலாளர் நந்தகுமார் எங்கு சென்று விட்டு வருகிரீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது பைகோ மத்காயிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்ததாக கூறினார். சிறிது நேரத்தில் அப்பகுதியில் உள்ள கருப்பனார் கோவில் அருகே அந்த பெண்ணை அமர வைத்திருந்தனர். உடல்நிலை மோசமானதால் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பைகோ மத்காயி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கோழிப்பண்ணை மேலாளர் நந்தகுமார் மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வட மாநில இளம்பெண் திடீரென இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News