நாமக்கல் இரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு நவோதயா பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
மதுரையில் இருந்து பெங்களூர் வந்தே பாரத் ரயில் தொடக்க விழா.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2024-09-03 09:47 GMT
மதுரையில் இருந்து பெங்களூருக்கு புதிதாக வந்தே பாரத் இரயில் சேவை மத்திய அரசால் தொடங்கப்பட்டது. நாமக்கல் இரயில் நிலையம் வந்த வந்தே பாரத் இரயிலை வரவேற்கும் விதமாக நாமக்கல் நவோதயாப் பள்ளியின் இசைக்குழுவினர் இசை வாத்தியம் முழங்க வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. பி. இராமலிங்கம் கலந்துகொண்டனர். தொடக்கவிழாவில் நாமக்கல் நவோதயா அகாடமி பள்ளி மாணவ, மாணவியர்கள் வரவேற்பு நடனம் நிகழ்த்தினார்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக் கூறினார்கள். மாலை 4.00 மணியளவில் வந்தே பாரத் இரயிலில் சேலத்திலிந்து நாமக்கல் இரயில் நிலையம் வரை நமது நவோதயா அகாடமி பள்ளி மாணவ, மாணவியர்கள் 100 மேற்பட்டோரும். 11 ஆசிரியர்களும் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.