நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றம்:
இன்று நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
Update: 2024-10-18 09:02 GMT
தீர்மானம் - 1 தலைமைக்கழகத்தின் ஆணைக்கிணங்க நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பெயரில் இந்தியன் வங்கி, நாமக்கல் கிளையில் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கை மாவட்டக் கழகச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் இயக்குவதெனவும் இக்கூட்டத்தின் தீர்மானிக்கப்படுகிறது. தீர்மானம் - 2 நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக கட்டிடம் கட்ட நிலத்தை தேர்வு செய்யவும் மற்றும் தேர்வு செய்த இடத்தில் மாவட்ட கழக அலுவலக கட்டிடம் கட்ட, கட்டிட கமிட்டி அமைக்கப்படும் தீர்மானிக்கப்படுகிறது. என இக்கூட்டத்தின் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட திமுக அவைத் தலைவர் மணிமாறன் தலைமை வகித்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே ஆர் என் ராஜேஷ்குமார் மற்றும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.