நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்!

ஐப்பசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்;

Update: 2024-10-19 10:19 GMT
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்!
  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினசரி அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று ஐப்பசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தில் இருந்தும் வருகை தந்தனர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Similar News