முதலமைச்சரின் அறிவிப்பு, தலைமை பொறியாளர் உடனடி ஆய்வு.

நைனாமலை கோவிலுக்கு ரூ.30.00 கோடியில் தார்சாலை அமைக்க முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் உடனடி களஆய்வு.

Update: 2024-10-22 18:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேந்தமங்கலம் அடுத்துள்ள நைனாமலை உச்சியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு மண்சாலை அமைக்கும் பணி முடிவுற்றது.சேந்தமங்கலம் அடுத்துள்ள நைனாமலை உச்சியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2700 அடி உயரத்தில் உள்ள கோயிலுக்கு, 3600 படிகட்டுகளை கடந்து செல்ல வேண்டும். இதற்கு தென் திருப்பதி என்ற சிறப்பு பெயரும் உண்டு. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 5வது சனிக்கிழமைகள் உற்சவ திருவிழா நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக நாமக்கல், சேலம், இராசிபுரம் ஆகிய பகுதியிலிருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இக்கோயிலுக்கு வரும் வயதானவர்கள். நோய்வாய்பட்டவர்கள் படி ஏறி செல்ல முடியாததால், மழை அடிவாரத்தில் உள்ள பாத மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசினம் செய்துவிட்டு செல்கின்றனர். எனவே, மலை உச்சியில் உள்ள இந்த கோயிலுக்கு சாலை அமைக்க வேண்டும் OT GOT பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சுற்றுலாத்துறையின் மூலம் ரூ.13.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மண் சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. மேலும் இன்று நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற்ற, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அருள்மிகு நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் தார் சாலை அமைக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றும் வகையில் அறிவித்தார். இந்த நிகழ்வில் சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் சி.சசிகுமார் , நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் கே.ஆர். திருகுணா மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News