கொங்கணாபுரம் அருகே காரில் தீ விபத்து; குழந்தை உட்பட மூன்று பேர் உயிர் தப்பினர்!!

தனது மாமனார் வீட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய போது சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் தீ பிடித்ததால் பரபரப்பு...;

Update: 2024-11-03 01:02 GMT
ஈரோடு மாவட்டம் சடையம்பாளையம் ரோடு முத்துசாமி காலணியை சேர்ந்த ராமசாமி மகன் மதன்குமார் (26) கார் சென்டர் நடத்தி வருகிறார் இன்று மாலை அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது ஒன்றை வயது பெண் குழந்தையுடன் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த எட்டி குட்டை மேட்டில் உள்ள மாமனார் வீட்டிலிருந்து   ஈரோட்டிற்கு zen Car காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது கொங்கணாபுரம் அடுத்த தங்காயூர் கிராமம்  அம்மன் காட்டூர் பகுதி என்கிற இடத்தில் செல்லும் போது வாகனத்தின் முன் பகுதியில் தீ பிடித்துள்ளது இதனையறிந்து சுதாரித்துக் கொண்ட மதன் குமார் உடனடியாக மனைவி மற்றும் குழந்தையுடன் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். கார் முழுவதுமாக தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது இதனை உடனடியாக எடப்பாடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்து வந்த திணைப்பு வீரர்கள் தீயணைப்பு போராடி தீயை அணைத்தனர் ஆனால் கார் முற்றிலும் எரிந்து வீணானது. மதன் குமார் கார் பிடித்ததை அறிந்து உடனடியாக காரில் இருந்து மனைவி மற்றும் குழந்தையுடன் இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Similar News