கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 உதவி பேராசிரியரக்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.,
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை அரசு கலை கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 உதவி பேராசிரியரக்களை போலீசார் கைது செய்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு.,
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை அரசு கலை கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 உதவி பேராசிரியரக்களை போலீசார் கைது செய்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு., பொள்ளாச்சி., செப்டம்பர்.,02 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள் தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொலைபேசி எண் 181 சம்பந்தமாக கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது., இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சில ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் சீண்டல் செய்ததாகவும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு whatsapp மூலம் இரவு நேரத்தில் அடிக்கடி குறுஞ்செய்திகளும் ஆபாச புகைப்படங்களையும் அனுப்பி வருவதாகவும், வகுப்பறையில் மிக நெருக்கமாக நின்று பாடம் எடுப்பதாகவும் போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட 7 மாணவிகள் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்களிடம் புகார்களை ரகசியமாக தெரிவித்துள்ளனர்., இதன் அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு ஒருங்கிணைந்த சேவை மையப் பணியாளர்கள் வால்பாறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்., இந்த புகாரின் அடிப்படையில் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாலியல் சீண்டல் விடுத்த சதீஷ்குமார் 39 வயது தற்காலிக உதவி பேராசிரியர், அன்பரசு 37 வயது லேப் டெக்னீசியன், முரளி ராஜ் 33 வயது தற்காலிக உதவி பேராசிரியர், மற்றும் ராஜபாண்டி தற்காலிக உதவி பேராசிரியர் ஆகிய நான்கு கல்லூரி ஆசிரியர்களை கைது செய்து பெண் வன்கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கல்லூரி ஆசிரியர்களை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இவர்கள் நான்கு பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு வழக்குகள் பதிவு செய்து நான்கு ஆசிரியர்களையும் சிறையில் அடைத்தனர்., இச்சம்பவம் குறித்து மாதர் சங்கம் மற்றும் அனைத்திந்திய வாலிபர் ஜனநாயக சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்., மாதா பிதா குரு தெய்வம் எனக்கூறி வருகிறோம் இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை குருவை நம்பி தான் அனுப்பி வருகின்றனர் அந்த குருவே இதுபோன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கல்வி அறிவை போதிக்கும் இடத்திலேயே இது போன்ற செயல்களில் ஒரு சிலர் ஈடுபடுவது மிகவும் வருத்தத்தை அளித்து வருவதாகவும் இவர்களுக்கு இருக்கும் தண்டனை விட மிகக் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் அதேபோல் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு உட்பட்டால் தங்களது இல்லங்களில் பெற்றோர்களிடம், உறவினர்களிடம் மற்றும் அண்ணன் தம்பி என உறவினர்களிடமும் கூற தயக்கம் இருந்தால் உடனடியாக 181 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து கூறினால் இது போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் எனவும் விரைந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்., பேட்டி., ஜெயப்பிரியா..இந்திய வாலிபர் சங்கம்.,