ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய மன்ற கூட்டத்திலிருந்து 4 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு..

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய மன்ற கூட்டத்திலிருந்து 4 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு..

Update: 2024-10-29 12:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராசிபுரத்தில் 11 ஊராட்சிகளில் 6 ஊராட்சிகள் நகராட்சியுடனும்,5 ஊராட்சிகள் பேரூராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்ற கூட்டத்திலிருந்து 4 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு.. நகராட்சி,பேரூராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுவுடன்  மன்ற கூட்டத்திற்கு வந்த நிலையில் கூட்ட அறையை பூட்டிய அதிகாரிகள்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஜெகநாதன்  தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு 27 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிமுக,பாஜக உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்  11 ஊராட்சிகளை 6 ஊராட்சிகள் நகராட்சியுடனும்,5 ஊராட்சிகள் பேரூராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.இந்த நிலையில் மன்ற கூட்டம்  நடைபெற்ற அரங்கிற்கு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி பேரூராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுவுடன் கூட்ட அரங்குக்கு சென்றனர். கூட்ட அரங்கில் வெளிப்புறத்தில் பொதுமக்கள் மனுக்களுடன் நின்று கொண்டிருந்த நிலையில் அதிகாரிகள் கூட்ட அரங்கின் கதவை உள்பக்கமாக முடி  கொண்டு திறக்காததால் பொதுமக்கள் சிறிது நேரம்  கூச்சிலிட்டனர்.பின்னர் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு வழங்குமாறு கூறிவிட்டுச் சென்றார்.பின்னர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று மனு கொடுத்து சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் 11 ஊராட்சிகளை நகராட்சி,பேரூராட்சி உடன் இணைக்கும் தீர்மானத்தை கைவிடக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.  கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்த   காக்காவேரி அதிமுக ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா கூறுகையில் ராசிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளான முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி,கோனேரிப்பட்டி உள்ளிட்ட 6 ஊராட்சிகளை ராசிபுரம் நகராட்சி உடனும், குருகுபுரம் கூனாவேலம்பட்டி, 85.ஆர்.குமாரபாளையம், பொன்குறிச்சி, ஆயிபாளையம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளை பில்லா நல்லூர் பேரூராட்சி உடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் மற்றும் நகராட்சி பேரூராட்சி உடன் இணைத்தால் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் சலுகைகள், குடிநீர் வரி,சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிவிதிப்புகள் அதிகமாகும் என்பதால் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்..

Similar News