ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

ஆரணி அடுத்த காமக்கூர்பாளையம் கிராமத்தில் உள்ள கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-10-30 01:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி அடுத்த காமக்கூர்பாளையம் கிராமத்தில் உள்ள கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றக்கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆரணி அடுத்த காமக்கூர்பாளையம் கிராமத்தில் ராமர் பஜனை கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஊராட்சித்தலைவரின் கணவர் சங்கர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி காமக்கூர்பாளையம் பொதுமக்கள் மற்றும் இந்துமுன்னணி அமைப்பினர் ஆகியோர் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தனர். இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். ஒன்றியபொதுச்செயலாளர் சரவணன், ஒன்றியசெயற்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் விக்னேஷ், நகரசெயலாளர் கபாலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் மனுவினை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் விசாரணை செய்து நடவடி்ககை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இது குறித்து ஊராட்சித்தலைவரின் கணவர் சங்கர் என்பவர் என்னுடைய இடத்திற்கான பத்திரம், பட்டா, சிட்டா என அனைத்தும் உள்ளது. என்று கூறினார்.

Similar News