மெட்டல் லைனரை திருடிய 4பேர் கைது : லோடு ஆட்டோ பறிமுதல்!

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் பொருத்தக்கூடிய மெட்டல் லைனரை திருடிய 4பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-12-26 06:17 GMT
கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் பொருத்தக்கூடிய மெட்டல் லைனரை திருடிய 4பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - கடம்பூர் அருகேயுள்ள குமாரபுரம் ரயில்வே கேட் அருகில் ரயில் தண்டவாளத்தில் பொருத்தக்கூடிய சுமார் 300 கிலோ மெட்டல் லைனர்களை மர்ம நபர்கள் லோடு ஆட்டோ மூலம் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.22ஆயிரம் ஆகும். இந்த நிலையில், மெட்டல் லைனரை திருடி லோடு ஆட்டோவில் ஏற்றி சென்ற போது ஆட்டோ பழுதாகி நின்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் சென்று அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வீரசிகாமணி காமராஜர் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் மாடசாமி (29), ஆறுமுகம் மகன் முக்கையா (35), பரமசிவம் மகன்கள் மாடசாமி (27), கற்பகராஜ் (31) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 4பேரையும் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் கோவில்பட்டி ஜேஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Similar News