சிவன்மலையில் பிறந்த 4 நாள் ஆன எருமை கண்ணுகுட்டி நாய்கள் கடித்து படுகாயம் 

சிவன்மலை அருகே பிறந்த 4 நாள் ஆன எருமை கண்ணுகுட்டி நாய்கள் கடித்து படுகாயம் 

Update: 2025-01-09 09:33 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் ஈஸ்வரமூர்த்தி (வயது 47) என்பவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகின்றார். மேலும் கால்நடைகளை வளர்த்து வருமானம் ஈட்டி வருகின்றார். இந்த நிலையில் அவர் வளர்ந்து வரும் எருமை ஒன்று நான்கு நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றுள்ளது. மேலும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை ஆடு, மாடு, எருமைகளை மேய்த்து விட்டு மாலை தோட்டத்தில் உள்ள தொண்டு பட்டியல் கட்டி வைத்து விட்டு இரவு வீட்டுக்கு உறங்கச் சென்றுள்ளார். பின்னர் எருமை மற்றும் கன்று குட்டி கத்தும் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது 4 க்கும் மேற்பட்ட நாய்கள் எருமைக் கன்று குட்டியை கடித்து கொண்டிருந்தது. பின்னர் ஈஸ்வரமூர்த்தி சத்தம் போடவே நாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டது. எருமை கன்றுக்குட்டி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறது. மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கால்நடை மருத்துவர் காயம் அடைந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக  விவசாயி ஈஸ்வரமூர்த்தி வேதனையுடன் தெரிவிக்கின்றனர். காங்கேயம் பகுதியில் தொடர்ச்சியாக நாய்களால் கால்நடைகள் வளர்க்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Similar News