திருப்பத்தூர் அருகே நில தகராறில் 4பேருக்கு அரிவாள் வெட்டு!
திருப்பத்தூர் அருகே நில தகராறில் 4பேருக்கு அரிவாள் வெட்டு! மருத்துவ மனையில் அனுமதி!;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 3 ஏக்கர் நில பிரச்சனை 20 ஆண்டுகள் இழுவை?. 4 பேருக்கு தலையில் வெட்டு!. போலிசார் விசாரணை.* திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த முனியம்மாள் (89) என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இவருடைய மகன்கள் சின்னராஜ் (65), கோவிந்தராஜ் (60) ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் இவர்களுக்கு சேர வேண்டிய சொத்தை சரிசமமாக பிரித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த கோவிந்தராஜ் நான் தான் தாயை பராமரித்து வருகிறேன் எனவே தாய் சொத்து எனக்கு தான் நீ தாயை பார்க்கவில்லை உனக்கு சொத்து தர முடியாது என்று தனது உடன் பிறந்த அண்ணனிடம் அடிக்கடி கடத்த 20 வருடங்களாக தகராறில் ஈடுபட்டு பட்டு வருவதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு ஊருக்கு வந்த இருவரது குடும்பத்தினரும் சமாதானம் பேச முடிவு செய்துள்ளனர். சமாதானம் சண்டையானதால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் கோவிந்தராஜ் மகன் பிரபு (30) பொங்கல் திருவிழாவுக்கு விடுப்பில் வந்த நிலையில் சமாதானம் சண்டை ஆவதை அறிந்து தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து பெரியப்பா சின்னராஜ் அவரது மனைவி சரஸ்வதி (48), ரஞ்சித்குமார் (34) பார்த்திபன் (31) நாலு பேரையும் பிரபு வெட்டிய காரணத்தினால் 4 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சரஸ்வதிக்கு தலையில் 30 தையலும், பார்த்திபனுக்கு 14 தையலும் போடப்பட்ட நிலையில் இருவரையும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் கத்தியால் வெட்டிய ராணுவ வீரரான பிரபுவை கைது செய்து அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 20 ஆண்டுகாலமாக நடக்கும் குடும்பச் சண்டை முடிவுக்கு வராத நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேட்டி_ரஞ்சித் சிகிச்சை பெற்று வருபவர்