விபச்சார வழக்கில் ஒருவர் கைது4 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

குமாரபாளையத்தில் நடந்த  விபச்சார வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் 4 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.  ;

Update: 2025-01-23 15:08 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை, ஆர்.ஏ.எஸ். தியேட்டர் எதிரில் விட்டலபுரியில் உள்ள தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்து, குமாரபாளையம் போலீசார் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நேரில் சென்று, விசாரணை செய்தனர். இதில் விடுதி மேலாளர் சிவராஜ், 36, என்பவரை கைது செய்தனர். விபச்சாரத்தில் பெண்கள் நால்வரை ஈடுபட வைத்த ஈரோட்டை சேர்ந்த  சிவா, என்பவர் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். பாண்டிச்சேரி, பெங்களுர், சென்னை, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு பெண்களை போலீசார் காப்பகத்தில் சேர்ந்தனர்.

Similar News