வழிப்பறி வழக்கில் 4 போ் கைது
திருச்சியில் நடைபயிற்சி சென்றவரையும், காவலாளியையும் மிரட்டி பணம் பறித்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்;
திருச்சி, கீழ கல்கண்டாா் கோட்டை காந்தி தெருவைச் சோ்ந்தவா் குருமூா்த்தி (45). இவா், திருச்சி பொன்மலைப்பட்டி ஆஞ்சனேயா் கோயில் அருகே திங்கள்கிழமை நடை பயிற்சி மேற்கொண்டாா். அப்போது, அங்கு வந்த ஒரு இளைஞா், அவரிடம் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்து சென்றாா். இதுகுறித்து, குருமூா்த்தி அளித்தப் புகாரின் பேரில் பொன்மலை போலீசாா் வழக்குப் பதிந்து, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பொன்மலைப்பட்டி பிரவீன் என்பவரைக் கைது செய்தனா். இதேபோல, திருச்சி செந்தண்ணீா்புரத்தில் தனியாா் நிறுவன கவாலாளி சம்பத் (55) என்பவரை தாக்கி கத்திமுனையில், கைப்பேசி, பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாக விஷால் கிருஷ்ணா, உதுமான் அலி, அன்வா் பாட்ஷா ஆகிய மூவரையும் பொன்மலை போலீஸாா் கைது செய்தனா்.