ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சம்பவ நாளன்று மர்ம நபர்கள் சிலர் கோவிலின் மீது கல்வீசி தாக்கி கோவிலின் முன்பக்கத்தை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இது குறித்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ரூபன் (26), திஷோன் (20), இளையா (24), ரகு (32) ஆகிய 4 பேரை நேற்று (பிப்.21) கைது செய்தனர்.