சாலையோரம் நின்றவர் பைக் மோதியதில் 4பேர் படுகாயம் 

பூதப்பாண்டி;

Update: 2025-03-10 02:46 GMT
குமரி மாவட்டம் இறச்ச குளம் பேச்சான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜையா (68). இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.00 மணியளவில் பேச்சாங்குளம் பகுதியில் நின்று கொண்டு இருக்கும் போது மணத் திட்டை பகுதியை சேர்ந்த அகில் முகமது (22) என்பவர் அவரது பைக்கில் நாகர்கோவிலிலிருந்து பூதப்பாண்டி நோக்கி அதிவேகமாக வந்தார். அப்போது  முதியவர் ராஜையா மீது மோதி விட்டு அதே வேகத்தில் அந்த வழியாக வந்த மற்றொரு பைக் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் ராஜையா படுகாயமடைந்தார்.       இதில்  எதிரே உள்ள பைக்கில் வந்த ஈசாந்தி மங்கலம் அடுத்த அண்ணா காலனியைசேர்ந்த ஜோஸ் (32) மற்றும் பிரபு (31) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.      இந்த விபத்தில் காயமடைந்த  ராஜையா, அகில் முகமது, ஜோஸ், பிரபு ஆகிய  நான்கு பேரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தனித்தனியே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.        இது குறித்து ராஜையா மகள் வனிதா பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் அகில் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News