மீனவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

கொல்லங்கோடு;

Update: 2025-03-21 07:23 GMT
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (44). மீன்பிடி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது பனவிளை பகுதியை சேர்ந்த குமார் (37) என்பவர் அதே ஹோட்டலில்  செல்போனை மறந்து வைத்துவிட்டு சென்றது குறித்து ஓட்டல் ஊழியரிடம் கேட்டுள்ளார்.        அப்போது சாப்பிட்ட பிறகு செல்போனை ஏன் எடுக்காமல் சென்றாய் ?  என்று தினேஷ்,  குமாரிடம் கேட்டுள்ளார். இதில் தினேசுக்கும் குமாருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.       இந்த நிலையில் குமார் மற்றும் அவரது உறவினர் ஜித்து (25), பிரதீப் (27), அஜித் (23) ஆகியோர் சேர்ந்து தினேஷ் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது சம்பந்தமாக தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஜித்து மற்றும் குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவான ரெண்டு பேரை தேடி வருகின்றனர்.

Similar News