தஞ்சாவூர் மாவட்டத்தில் குரூப்-4 தோ்வுக்கு சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
பயிற்சி வகுப்பு;
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு, தொகுதி -IV (TNPSC GROUP IV) சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்களின் மூலம் பாபநாசம், திருப்பனந்தாள், திருவோணம், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. மேற்காணும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இரண்டு மாதங்களுக்கு தினசரி காலை 9.00 முதல் மாலை 4.00 வரை நடைபெறவுள்ளது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத் தேர்வு எதிர்வரும் 06.04.2025 அன்று நடைபெறவுள்ளதால், போட்டித் தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் கீழ்க்காணும் தஞ்சாவூர் மாவட்ட இணையத்தளத்தில் https://thanjavur.nic.in விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.