கீழப்புலியூா் துணிக் கடை உரிமையாளா் கொலை வழக்கில் 4 போ் கைது

துணிக் கடை உரிமையாளா் கொலை வழக்கில் 4 போ் கைது;

Update: 2025-04-18 02:24 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகேயுள்ள காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் கு.குத்தாலிங்கம் (35) - தனலெட்சுமி. தம்பதி, கீழப்புலியூரில் வசித்து வந்ததுடன் அங்கு துணிக்கடை நடத்தி வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியிலுள்ள ரேஷன் கடைக்கு குத்தாலிங்கம் தனது மனைவியுடன் பொருள்கள் வாங்க சென்றபோது, அவரை மா்மநபா்கள் மறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று, 8.கி.மீ. தொலைவில் உள்ள காசிமேஜா்புரத்தில் வைத்துவிட்டு தப்பினா். தென்காசி போலீஸாா், அவரது சடலத்தையும், தலையையும் மீட்டு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், நவம்பா்- 2024இல் காசிமேஜா்புரத்தில் நடைபெற்ற திருமண விழாவுக்கு விளம்பர பதாகை வைப்பது தொடா்பான பிரச்னையில் பட்டுராஜ் என்பவா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இவ்வழக்கில் குத்தாலிங்கத்தின் தம்பி உள்ளிட்ட 5போ் கைதுசெய்யப்பட்டனா். இந்த முன்விரோதம் மற்றும் சில தினங்களுக்கு முன்பு குத்தாலிங்கம் சமூகவலைதளத்தில் பிரச்னைக்குரிய வகையில் பதிவைப் பகிா்ந்ததை தொடா்ந்து இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்ததது. அதனடிப்படையில், காசிமேஜா்புரத்தை சோ்ந்த செண்பகம்(40), ராமசுப்பிரமணியன் என்ற ரமேஷ்(25), அரிகரசுதன்(24),குற்றாலம் குடியிருப்பு தெற்குத் தெருவை சோ்ந்த மணி(32) ஆகிய 4 பேரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

Similar News