கோவை: போதை மாத்திரை விற்பனை - 4 பேர் கைது !
கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி தனிப்படை போலீசார் சின்னியம்பாளையம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில், சந்தேகத்திற்கிடமாக நின்ற காளப்பட்டியை சேர்ந்த யஷ்வந்த் (25), ஒண்டிப்புதூரை சேர்ந்த சந்தானராஜ் (22), நிதிஷ்குமார் (24), மற்றும் பிரதீப் (24) ஆகிய நால்வரும் பிடிபட்டனர். விசாரணையில் இவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் என்பதும், போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 535 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.