கோவை: மருதமலைக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை !

கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிப்பு.;

Update: 2025-04-19 07:55 GMT
கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் காரணமாகவும், வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும் இனி வரும் காலங்களில் செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் மலைக்கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News