காங்கேயம் அடுத்த கீரனூர் பகுதியில் சிலர் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காங்கேயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து கீரனூர் கவளக்காட்டுவலசில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட தொட்டாம்பட்டியை சேர்ந்த யுவராஜ் (வயது 28) உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டது.