ஜெயங்கொண்டம் அருகே 4 மாடுகளுடன் மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே சிலப்பனூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி நான்கு கரவை மாடுகளுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2025-05-18 16:06 GMT
அரியலூர், மே.18- அரியலூர் மாவட்டம் தூத்தூர் அடுத்து சிலப்பனுர் கிராமத்தைச் சேர்ந்த மருதாயி என்பவர் தனது நான்கு கரவை மாடுகளை வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென நான்கு மாடுகளும் காணாமல் போகவே மாட்டை தேடி பல்வேறு இடங்களில் தேடி உள்ளார் அப்போது மரங்களுக்கு இடையே பல்கலை மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மின்சாரம் தாக்கி நான்கு மாடுகளும் உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே செல்ல முயற்சித்த போது கீழே அருந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மூதாட்டி மருதாயியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News