தஞ்சாவூர் மாவட்டத்தில், 4 குளங்களில் மீன்பிடி உரிமை குத்தகைக்கு விட ஏலம்
ஏலம்;
தஞ்சாவூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் இயங்கும், பாபநாசம் வட்டம் அம்மாப்பேட்டை சரகத்தில் உள்ள வலையன்குளம், புத்தூர் அய்யனார் குளம், பல்லவராயன் பேட்டை நரிக்குளம் மற்றும் கும்பகோணம் வட்டாரத்திலுள்ள பிடாரிகுளம் என்கிற கிராமிய செயல்விளக்கக்குளம் ஆகியவற்றின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக 29.05.2025 அன்று முதல் மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம். தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு எண் - 873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் – 613001 என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண். 04362- 235389, மின்னஞ்சல் :adfthanjavur03@gmail.com, மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்கண்ட இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.