சங்கரன்கோவிலில் 4 பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் பறிமுதல்

4 பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் பறிமுதல்;

Update: 2025-06-13 00:28 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் கடந்த மே மாதம் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் குறையுடைய வாகனங்கள் பழுதுநீக்கப்பட்டனவா எனவும், உரிய அனுமதி பெற்று இயங்குகிா எனவும் சோதனையிட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டாா். அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜி. செல்வி தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன், ஊழியா்கள் சாலையி சென்றுகொண்டிருந்த பள்ளி, கல்லூரிப் பேருந்துகளை ஆய்வு செய்தனா். அப்போது, அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று பெறாமல் இயங்கிய கல்லூரிப் பேருந்து, தகுதிச் சான்று பெறாத 2 பள்ளிப் பேருந்துகள், பதிவு செய்யப்படாத புதிய பள்ளிப் பேருந்து ஆகிய 4 பேருந்துகளைப் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுசென்றனா். பதிவு செய்யப்படாமலும், அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று ஆகியவை பெறாமலும் இயக்கப்படும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எச்சரிக்கை விடுத்தாா்.

Similar News