செந்நாய்கள் கடித்ததில் 4 மாடுகள் உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே செந்நாய்கள் கடித்ததில் 4 மாடுகள் உயிரிழப்பு;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மன்னவனூர், கரும்பாறை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 4 மாடுகளை செந்நாய்கள் கடித்ததில் உயிரிழந்தன. சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில் செந்நாய்கள் கடித்து இறந்த மாடுகளின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது இப்பகுதியில் செந்நாய்களை விரட்டுவதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.