தஞ்சாவூர் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சத்தியமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஆர்.பிரதீஸ்வரன் (36), கும்பகோணம் பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த ஆர்.பாஸ்கர் (43), சீனிவாசநல்லூர் அண்ணா நகரைச் சேர்ந்த பி.சரவணன் (48), தஞ்சாவூர் அருகே ராமாபுரம் தோட்டக்காடைச் சேர்ந்த டி.அழகேசன் (30) ஆகியோர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து, பிரகதீஸ்வரன், பாஸ்கர், சரவணன், அழகேசன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.