யூபிஎஸ்சி தேர்வில் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற சேர்ந்த 4 மாணவ மாணவியரை நேரில் அழைத்து பாரட்டிய சட்டமன்ற உறுப்பினர் -

யூபிஎஸ்சி தேர்வில் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற சேர்ந்த 4 மாணவ மாணவியரை நேரில் அழைத்து பாரட்டிய சட்டமன்ற உறுப்பினர் -;

Update: 2025-06-29 13:49 GMT
யூபிஎஸ்சி தேர்வில் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற சேர்ந்த 4 மாணவ மாணவியரை நேரில் அழைத்து பாரட்டிய சட்டமன்ற உறுப்பினர் - ஆட்சி பொறுப்பேற்று வாய்ப்பு கிடைத்தால் சிவகாசியில் கல்வி தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த பாடுபட உள்ளதாக தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் உறுதி.... சிவகாசியை சேர்ந்த ரீட்டா மஹியா (640), கோகுல்(424), அப்சரா(192), தாயில்பட்டியை சேர்ந்த கோகுலக்கண்ணன் (781) ஆகிய நால்வரும் நடந்து முடிந்த UPSC--IAS தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் சிவகாசியை சேர்ந்த 4 பேர் தேர்ச்சி பெற்று இந்திய அரசு பணிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற 4 பேரையும் நேரில் அழைத்து பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார். இதையடுத்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கூறும்போது :- மாவட்ட ஆட்சியராக தகுதி பெற்ற தாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைக்கேற்ப கல்வியுடன், தொழில் செய்து ஐஏஎஸ் தேர்வு வெற்றி பெற்றதாக தெரிவித்து அவரவர் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்ட தாக கூறினர். முன்பாக விருதுநகர் மாவட்டம் கல்விக்கு முதலிடம் வகித்த நிலைமை மாறி, தற்போது தொழிலுக்கு முன்னு ரிமை கொடுத்து வருவதை மாற்ற வேண்டும். யுபிஎஸ்சி தேர்வில் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவகாசி வட்டாரத்தில் 4- நபர்கள் சாதனை படைத்துள்ளது பெருமையாக உள்ளது. சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு தொழில் தவிர்த்து பிறதொழில்களை முன்னெடுத்து முன்னேற்ற வேண்டும், கல்லூரி படித்த பின்பு யூ பி எஸ் சி தேர்வுக்கான பயிற்சி எடுக்காமல் முன்கூட்டியே தங்களது கல்லூரி வாழ்க்கையிலேயே மாணவ, மாணவிகள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியரின் கலந்துரையாடல்(காபிவித் கலெக்டர் ) நிகழ்ச்சிகளையும் மாணவ மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றனர். பேட்டி:-1) கோகுல கண்ணன்- தாயில்பட்டி. 2) கோகுல்- சிவகாசி

Similar News