கரூர்-குரூப்-4 தேர்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூர்-குரூப்-4 தேர்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.;
கரூர்-குரூப்-4 தேர்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு இன்று 65 மையங்களில் 18,030 பேர்எழுத தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மாவட்டத்தில் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வு எழுத முகாம்கள் அமைக்கப்பட்டு தேர்வவர்கள் தேர்வு எழுதினர். இதில் தாந்தோணி மலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு முகாமையும், காந்திகிராமத்தில் உள்ள தெரசா பள்ளியில் நடைபெற்ற தேர்வு முகமையும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.